jaffna sports
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான இருபது-20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி
[
2010-03-09]

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி விளையாட்டுத்துறையினரால் யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வர் நோயல் விமலேந்திரன் வெற்றிக் கிண்ண அகில இலங்கை பாடசாலை களுக்கிடையேயான இருபது-20 துடுப்பாட்டச் சுற்றுப் போட்டிகள் இன்று செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி பிக்னல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி போட்டியில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, மத்தனை வித்யா ஆண்கள் பாடசாலை, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சென்ஜோன்ஸ் கல்லூரி, மன்னார் சென்சேவியர் ஆண்கள் கல்லூரி, கொழும்பு இசுப்பத்தானக் கல்லூரி,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு தேஸ்டன் கல்லூரி, யாழ்.சென்.பற்றிக்ஸ் கல் லூரி, மகாஜனாக் கல்லூரி, கண்டி சென் சில் வஸ்ரர் கல்லூரி, யாழ்.மத்தியகல்லூரி, யாழ்ப் பாணக்கல்லூரி ஆகிய 15 பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன.

சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி எதிர் வரும் சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடை பெறவுள்ளது.

நெஸ்டமோல்ட் அனுசரணையில் நடந்த - மினி மரதனில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவீர,வீராங்கனைகள் பங்கேற்றனர்

001

நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நேற்று நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கு பற்றினர்.

இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் எம்.தினேஷிம் பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரியும் முதலிடத்தைப் பெற் றனர். அத்துடன் திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தனும் பெண்கள் பிரிவில் என். மேசியும் முதலிடத்தைப்பிடித்தனர்.

நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணை யுடன் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டி நேற்று மாலை 3 மணிக்கு யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் ஆரம்பமானது.இதில் பாடசாலை மட்டம், திறந்த மட்டம் என இரண்டு மட்டங்களில் ஆண்கள், பெண் கள் பிரிவுகளாக நடத்தப்பட்டது.

002 இதற்காக நேற்றுப் பிற்பகல் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந் தனர் .எனினும் பதிவு செய்தவர்களைவிட மேல திகமாக வந்தவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆரம்பமான போட்டிகளில் 5 ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பொலிஸார் இராணுவத்தினரின் வீதி ஒழுங்கு படுத்தல்களுடன் மிக நீண்ட வரிசையில் வீரர்கள் மினி மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் என்.தினேஷ் (வயது 19) 39 நிமி டங்கள் 4 விநாடிகளில் தூரத்தைக்கடந்து முதலிடத்தையும் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் ஏ.ஜீவன்ராஜ் (வயது 18) தூரத்தை 40 நிமிடங்கள் ஒரு விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாமிடத்தையும் வல்வெட்டித்துறை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் பி.ஜசிகன் 40 நிமிடங்கள் 5 வி நாடிகளில் தூரத்தைக்கடந்து 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

பாடசாலை மட்ட பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரி (வயது 16) முதலாமிடத்தையும் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவி ரேவதி இரண்டாமிடத்தையும் பெற்றனர். திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தன் முதலாமிடத்தையும் எஸ்.ஜெகதீஸ்வரன் இரண்டாமிடத்தையும் பெண்கள் பிரிவில் என்.மேசி முதலாமிடத்தையும் என்.சுமதி இரண்டாமிடத்தையும் எஸ்.அனுசியா மூன்றா மிடத்தையும் பிடித்தனர்.

நீண்டகாலத்திற்கு பின்னர் யாழ். மாவட் டத்தில் இடம்பெற்ற வடமாகாண மட்ட பெரும் மரதன் ஓட்டம் என்பதால் ஆயிரக்கணக்கான வீர,வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வீதிகளில் ரசிகர்கள் கூடி நின்று போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

  104th"BATTLE OF THE NORTH" encountered has won by Jaffna central college

1st Innings Score Summary


St Jhon's College - 165/10
Jaffna Central College - 159/10

2nd Innings Score Summary


St Jhon's College - 124/10
Jaffna Central College - 131/6

 




 
யாழ்ப்பாண நேரம்
 
தொடர்புகொள்ள
 
இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம். இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம் நன்றி | jaffna இணையத்தள ஆசிரியர் குழு jaffna@live.fr இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி jaffna@live.fr 0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள SKYPE இனை உபயோகியுங்கள் pirasath20
விளம்பரகள்
 
jaffna logo Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Free counter and web stats
 
மொத்தம் 25966 visiteurs (69393 hits) நன்றி மீண்டும் வருக.Copyright 2008-09 © newjaffna.com, All rights reserved.
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement