யாழ் செய்திகள்

தேசிய வீர மாணவர் விருது' நிகழ்வில் யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது
 
 
'தேசிய வீர மாணவர்களுக்கான விருது'  நிகழ்வு இன்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சின்னராசா தனன்சிகா என்ற தமிழ் மாணவிக்குத் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தனது உயிரை துச்சமென மதித்து உயிராபத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவிபுரிந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசிய வீர மாணவர்களாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டாவது தேசிய வீர மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வே இன்று நடைபெற்றது.

உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், செல் தாக்குதல்களுக்கு மத்தியில், பதுங்கு குழிக்குள் சிக்கிக்கொண்ட 11 வயது மாணவரை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும், மேலும் சிலரை உயிராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காவும் இந்த விருது மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டது




யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர் நியமனம்
[2010-03-11]

யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா கடந்த பெப்ர வரி 19ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலையின் செயலர் அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமை யாற்றியதன்பின் கொழும்பு பல்கலைக்கழ கத்தில் மருத்துவ நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற பின்னர் வவுனியா இடைத்தங்கல் அகதிமுகாமில் பொறுப்பாளராகக் கடமை யாற்றினார்.

தொடர்ந்து சுகாதார அமைச்சில் கடமை யாற்றி தற்போது யாழ். போதனாவைத்திய சாலையில் பதில் பணிப்பாளராக பதவியுயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தில் தங்குமிட வசதி! - யாழ்.அரச அதிபர் தகவல்
[ 2010-03-09 ]

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக் கான தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த தாவது, தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவ தற்குரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. யாழ்.புகையிரத நிலையம், யாழ்.பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள பழைய மேல் நீதிமன்றக் கட்டிடமும் சுற்றுலாப் பயணிக ளுக்கான தங்குமிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நயினாதீவு செல்லும் சுற்று லாப் பயணிகளுக்காக குறிகாட்டுவானில் குடி தண்ணீர், மலசலகூட வசதி, வாகனத் தரிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் குறிகாட்டுவானில் பயணிக ளின் நலன் கருதி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடற்படையினரும் ஒத் துழைப்பு வழங்குகின்றனர் என யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவித்தார்.
கீரிமலையில் அடிப்படை வசதி
[ 2010-03-09 ]

 

கீரிமலை நகுலலேஸ்வரம் ஆலயத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி உற்சவத்திற்கு செல்லும் பக்தர்க ளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2இலட்சம் ரூபாய் நிதியை யாழ்.அரச அதிபர் க.கணேஷ் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்நிதியின் மூலம் குடி நீர், மலசல கூட வசதிகளை தெல்லிப்பழை பிரதேச செயலகத் தினரால் ஏற்படுத்தி வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மகளிர் தின நிகழ்வுகள்
 

யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையம் தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து நடத்தும் மகளிர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பெண்கள் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்து சிறப்பிப்பதுடன் சிறப்பு விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தீபிகா உடகம கலந்துகொள்ளவுள்ளார்.

நிகழ்வில் ஆசியுரையினை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்,பெரிய கடை பள்ளிவாசல் மெளலவி மகமூட்,நாகவிகாரைத் தலைவர் மீககயடுறோ ஸ்ரீவிமலஹிம்ஸ்ரீ ஆகியோர் வழங்கவுள்ளதுடன் தேசிய சமாதானப் பேரவைப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா ,மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் சறோஜா சிவச்சந்திரன், தேசிய சமாதானப் பேரவையின் பிரதான நிர்வாக அதிகாரி திருமதி றெஜினா இராமலிங்கம், வண.பிரவீன் அடிகளார், சுவியான் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தாம் சந்தித்த அனுபவங்களையும் சாதித்த சாதனைகளையும் எடுத்துக்காட்டவுள்ளதோடு யாழ்ப்பா ணத்தில் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக இம் மாநாட் டில் சிபார்சு செய்யப்பட்ட விடயங்களை பிரதான அதிகாரிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது. மேலும் இத்தினம் ஓர் தேசிய விடுதலை தினமாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் கோசம் எழுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[
2010-03-08 ]
யாழ்ப்பாண நேரம்
 
தொடர்புகொள்ள
 
இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம். இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம் நன்றி | jaffna இணையத்தள ஆசிரியர் குழு jaffna@live.fr இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி jaffna@live.fr 0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள SKYPE இனை உபயோகியுங்கள் pirasath20
விளம்பரகள்
 
jaffna logo Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Free counter and web stats
 
மொத்தம் 25969 visiteurs (69396 hits) நன்றி மீண்டும் வருக.Copyright 2008-09 © newjaffna.com, All rights reserved.
Ce site web a été créé gratuitement avec Ma-page.fr. Tu veux aussi ton propre site web ?
S'inscrire gratuitement